Skip to main content

சமூகநீதிக் காவலர்


ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது...
ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்... 
கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே?
1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்....
பிரதமர் வி.பி.சிங்கிடம் இருந்து இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு கடிதம் வந்து சேர்ந்தது... இடஒதுக்கீட்டை மாநிலங்களில் அமல்படுத்துவது சம்பந்தமாக மண்டல் கமிஷனின் அறிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்க அந்தக் கடிதம் பதிலுக்குக் காத்திருக்கும் பணியாளர் போல் நின்றது... 
நெடுநேரம் அந்தக் கடிதத்தை நிற்க வைக்காமல் “உற்சாகமாய் ஆதரித்து தமிழக முதல்வர் கலைஞரின் (ஆஹா இவ்விதம் உரைக்கும்போது எவ்வளவு சுகம்)  பதில் கடிதம் போய்ச் சேர்ந்தது பிரதமர் அலுவலகத்திற்கு ”... 
அதுதான் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களிலேயே முதலாவதாக வந்து ஆதரவளித்த முத்தமிழறிஞரின் முதல் கடிதம்... 
கடிதம் கண்டு உற்சாகமடைந்த வி.பி.சிங், உடனடியாக தமிழக முதல்வர் கலைஞரை(மீண்டும் அதே உணர்வு)ப் பாராட்டி - தமிழக அரசைப் பாராட்டி எழுதிய கடிதம் இந்திய வரலாற்று நூலின் சமூகநீதி அத்தியாயத்தின் முதல் தாளாய் படபடத்துக் கொண்டிருக்கிறது... 
அந்த படபடப்புச் சத்தம் உலகத்தில் ஒலி உள்ளவரை & மனிதனுக்குக் காதுகள் உள்ளவரை முரசொலியாய் ஒலித்துக் கொண்டே இருக்கும்....
கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடா...? தாழ்த்தப்பட்டோருக்கா? பிற்படுத்தப்பட்டோருக்கா? சீர்மரபினருக்கா? பட்டியல் இனத்தவருக்கா?
தலைசுற்றி மீண்டும் நிலைகொள்ள மதுரை சித்திரைத் தேரோட்டம் தனது இருப்பிடத்தில் நிலை கொண்டிருக்கும் நேரம் பிடித்தது பிராமணர்களுக்கு...
அனைத்துப் பதவிகளையும், அரசு அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் அனுபவித்து ஆனந்தமாய் வாழ்ந்து வந்த பிராமணிய சமூகத்திற்கு முதுகில் சவுக்கடி விழுந்தது...  எவ்வித உடல் உழைப்பையும் கண்டிராத அந்த வெண்ணிற உடம்பில் அந்த அடியால் தோன்றிய சிவப்புத் தழும்புகள் பளபளவென்று மின்னின இப்படியான வார்த்தைகளின் மூலமாக...
“ஒன்றாய் இருக்கும் மக்களை இடஒதுக்கீடு என்ற வட்டத்திற்குள் சிக்க வைத்துப் பிரிக்கிறார்கள்”
“இந்த இடஒதுக்கீடு மக்களை சாதிய ரீதியாகப் பிளவுபடுத்தும்”
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வார்த்தையை புறந்தள்ளி, பிறப்பால் படிநிலை உருவாக்கி மேல்சாதி, கீழ்சாதி என்று உருவாக்கிய அவர்கள்தான்... அறிவியல் ரீதியாக பிறப்புறுப்பில் மட்டுமே பிறந்த மனிதனை தலை,தோள், வயிறு, பாதம் என்று பிறந்ததாய் கதையளந்து ஆயிரங்காலத்துப் பயிராய் சாதியத்தைக் காத்து வளர்த்து வந்த அவர்கள்தான் மேற்கண்டவற்றையும் சொன்னார்கள்... 
இப்படியாக பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசி, ஒன்றுந்தெரியாத அப்பாவி மாணவர்களை இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் கிளப்பினார்கள்... உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றார்கள்... இன்னும் என்னென்னவோ உணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் அனைத்தையும் செய்தார்கள்... 
விஷப்பாம்பின் நாக்கில் தேன்சிந்தினால் சுவைக்கவா முடியும்....?
ஆனால் சுவைத்துத் தொலைத்தார்கள் அந்த அப்பாவி மாணவர்கள்... 
அவர்களின் எதிர்பார்ப்புப்படியே மாணவர்களின் போராட்டங்கள் நடந்தன... மாணவ - மாணவிகள் பட்டினிப்போர் நடத்தினார்கள்... போராட்டம் முற்றி சிலர் “தீக்குளித்தார்கள்...” இல்லையில்லை இதனை இப்படி செய்வினையாகச் சொல்லக்கூடாது “தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள்...” என்று செயப்பாட்டு வினையாகச் சொல்ல வேண்டும்  
அப்போது நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் எழுதினார் “தீக்குளிக்க விரும்பவில்லை என்று சொன்ன மாணவர்கள் மீது மற்றவர்கள் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லியில் 7-ம் வகுப்புப் படித்து வந்த பிரவீண் கௌர் என்ற மாணவி, தான் தீக்குளிக்க விரும்பவில்லை என்று கூறிய பிறகும் வேறு சில மாணவர்கள் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்ததாக அந்த மாணவி மரண வாக்குமூலத்தில் தெரிவித்தார்.” 
ஆனால் இது இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் எழுச்சி என்று கூசாமல் பொய் சொன்னார்கள்... ( ஈழப்பிரச்சனையில் அப்பாவி இளைஞர்களின் உணர்ச்சியைக் கிளப்பி அவர்களின் படிப்பையும், உயிரையும் சுட்டுப்பொசுக்குகிறார்களே தமிழ் நாஜிகள் அதேபோல...) 
ஆனால் இவர்களின் பம்மாத்துக்களையெல்லாம் புறந்தள்ளி கொண்டு வந்தார் இடஒதுக்கீட்டை  இப்படி இறுதிவடிவம் கொடுத்து...
“1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டியல் சாதியினரின் எண்ணிக்கை 88.81 லட்சமாகவும், பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை 5.20 லட்சமாகவும், மாநில மக்கள் தொகை 484.08 லட்சமாகவும் இருந்தது. பட்டியல் சாதியினரின் சதவீதம்  18.35 மற்றும் பட்டியல் பழங்குடியினரின் சதவீதம் 1.07. இதன் காரணமாகவும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படியும் பொதுப்பணிகள் 18% மற்றும் பட்டியல் பழங்குடியிருக்கு 1% என்று தனி இடஒதுக்கீடு செய்ய அரசு (கலைஞர் அரசு) முடிவு செய்திருக்கிறது.  பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு தனி இடஒதுக்கீடு தருவதால் கூடுதலாகத் தேவைப்படும் 1% பொதுப்பட்டியலில் தற்போதுள்ள 32% லிருந்து (ஆஹா!) எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கான 30% மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் - சீர் மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் எந்த மாறுதலும் இல்லை” என்று அப்போது வந்த ஒரு அரசாணையில் தெள்ளத்தெளிவாக வரையறுக்கப்பட்டது.
இப்படியாக, தொட்டியில் குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டுக் கிடந்த மீன்களை மகா சமுத்திரத்தின் பிரம்மாண்டமான நீர்வெளியில் கொண்டுபோய் விட்டார் கலைஞர்... அந்த மீன்கள் வாழ்வில் இதுவரை கண்டிராத ஆயிரமாயிரம் அதிசயங்களை இன்றுவரை கண்டுகொண்டே இருக்கின்றன... கலைஞர் பூரிப்போடு இதனையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறார்... 
எதிர்ப்பலைகள் இருக்கத்தான் செய்கின்றன... அலைகளுக்கு அஞ்சுபவையா அந்த மீன்கள்? அதன் தோற்றுவாய் திராவிடமாய் இருக்கும்போது தகர்த்தெறிய திராவிடத்தின் தங்க மீன்கள்கள் தயங்காது என்பதை வரலாறுகள் நிரூபித்து வருகின்றன. 
“இந்த அக்யூஸ்ட்ட என்ன மாதிரி மேலதிகாரியை நம்பி அனுப்பாம நேத்து வந்த இந்த இம்புட்டுக்காண்டு பையன்ட்ட அனுப்புறீங்களே... அப்ப சின்சியாரிட்டிக்கும் சீனியாரிட்டிக்கும் என்ன சார் மரியாத” என்று வடிவேல் கேட்டது மாதிரி... இப்படி பெரிய பெரிய பொறுப்புக்களையும் பதவிகளையும் இடஒதுக்கீடு என்ற பெயரில் அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் “தகுதி-திறமை” என்பதற்கு மதிப்பில்லாது போய்விடும் என்று சீரியஸாக காமெடி பண்ணினார்கள்...
கேட்கவா வேண்டும் கலைஞரை... முரசொலியில் பதில் கடிதம் எழுதுவார் என்று நினைத்தால் கவிதையாய் எழுதினார்...
“ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமம் எனில்
அவன் உயர்சாதிக்கு மட்டும்
தங்கத்தால் மூளை செய்து
தலைக்குள் வைத்தானா?
மற்ற சாதிக்கெல்லாம்
மண்டைக்குள் இருப்பதென்ன?
களிமண்ணா
சுண்ணாம்பா?”
பதில் கிடைக்குமா.... இந்தக் கேள்விக்கு? 
எந்தக் கேள்விக்குத்தான் பதில் கிடைத்தது அவர்களிடம் இருந்து இதற்குக் கிடைக்க...

இவ்விதமாக இடஒதுக்கீட்டை அமல்படுத்தி அது சீர்பட நடக்க தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார் கலைஞர்... 
அதற்கு எதிராக வந்த அனைவரையும்&அனைத்தையும் தீர்க்கமாக எதிர்த்தார்... இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான அவரின் மூர்க்கத்தமான  போராட்டங்களுக்கு நீதிமன்றங்களும் தப்பவில்லை... 
இந்த இடஒதுக்கீடானது கல்வி, வேலைவாய்ப்பு என்று மட்டும் நின்றுவிடவில்லை... தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் அதிகாரப்பரவலுக்காக சட்டமன்றங்கள், நகராட்சி-பேரூராட்சிகளிலும் இடஒதுக்கீடுகள் கலைஞரால் கொண்டுவரப்பட்டன... அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கும் தரப்பட்டது... 
இதற்கும் பல எதிர்ப்புகள் வரத்தான் செய்தன... ஆனாலும் இவை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட்டன... இந்தச் சமூகநீதிச் சக்கரம் நழுவி விடாமல் அச்சாணியாய் கலைஞர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்...
இப்படியாக அனைத்து வகையான இடஒதுக்கீடுகளும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், “ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகக்கூடாது?” என்று ஒருபோடு போட்டார் கலைஞர்.
நரிகள் டரியல் ஆயின...
“அபச்சாரம் அபச்சாரம்... பிராமணாள் அல்லாதார் எப்படி அர்ச்சகராக முடியும்... அதற்கு ஆகம விதிகள் இடம் கொடுக்காது” என்று கூக்குரல்கள் பலமட்டத்திலிருந்து கிளம்பின...
“அப்படியா... அப்படியென்றால் ஆகம விதிகளைக் கற்றவர்கள் அர்ச்சகர் ஆகலாம்தானே...! அவர்கள் கோவில் கருவறைக்குள் நுழையலாம்தானே...” என்று மடக்கிக் கேட்ட கலைஞர் “முறைப்படியான வேதங்களை கற்ற எந்த சாதியாரும் அர்ச்சகராகலாம்” என்ற அரசாணையைக் கொண்டு வந்தார்... 
அப்போது கலைஞர் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வர வேண்டும்... என்பது பெரியாரின் ஆசை... அந்த ஆசை நிறைவேறாமலேயே அவரை நெஞ்சில் முள்ளோடு புதைத்து விட்டோம்... இப்போது இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலமாக அந்த முள் எடுக்கப்பட்டுவிட்டது” என்று பெருமிதம் பொங்கச் சொன்னார்.
இதன்படி அர்ச்சகர் பள்ளிகள் துவக்கப்பட்டன... வேதத்தில் ஆர்வம் கொண்ட பலர் அர்ச்சகர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்கள்... 
இவர்கள் கருவறைக்குள் நுழைந்து விடுவார்களே என்று நீதிமன்றம் சென்றார்கள்...  நீதிமன்றமும் இதுவிஷயத்தில் அவர்களுக்கு ஆதரவான நிலையே எடுத்தது... 
பெரியாரின் நெஞ்சில் இருந்து எடுக்கப்பட்ட அந்த முள் பல்வேறு வடிவம் எடுத்து சமூகநீதி வேண்டுவோரின் நெஞ்சில் பதிந்து உறுத்திக் கொண்டிருக்கிறது இன்று வரைக்கும்...
ஒரு ருஷ்ய நாவலின் உரையாடல் நினைவுக்கு வருகிறது...
ஒரு வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒரு தொழிலாளி நீதிபதிகளைப் பார்த்து “பிரதிவாதிகளே...!” என்பார்...
“நாங்கள் நீதிபதிகள்... எங்களை பிரதிவாதி என்கிறாயா? ” என்று கோபமாகக் கேட்பார்கள்  அவர்கள்...
“எப்போதும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராகத் தீர்ப்புக் கூறும் நீங்கள் எங்களுக்கெல்லாம் பிரதிவாதி போன்றவர்தான்... பிரதிவாதிகளே தீர்ப்பையும் கூறும் அதிசயம் இங்குதான் நடக்கிறது” என்பார் அந்தத் தொழிலாளி நக்கலாக...
அப்படித்தான் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்ற அரசாணையையும் ஆகம விதிகளை காரணம் காட்டி கிடப்பில் போட்டுவிட்டார்கள் அந்த நீதிபதிகள்...
இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகள் அரசாணை விஷயத்தில் மட்டுமா...?
“பருவப்பெண்ணின் வயதுடைய ஆண்டு” வழக்கிலும் அந்தப் பிரதிவாதிகளே தீர்ப்பைச் சொல்லி விட்டார்கள்... விடுதலையும் ஆக்கிவிட்டார்கள்...
இதற்கு எதிராகவும் சமூகநீதி நாயகனின் போராட்டம் தொடரும்... அந்தப் போராட்ட உதிர வெள்ளத்தில் எங்கள் உதிரமும் ஒன்றிணையும்...
வாழ்க சமூகநீதியின் காவலர்...



Comments

Popular posts from this blog

தன்னடக்கம் - ஒரு சீன சிறுகதையின் மொழிபெயர்ப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு குய் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சீனாவின் முதலமைச்சருக்கு தேரோட்டும் சேவகனாக பணியாற்றி வந்தான். ஒருநாள் இருவரும் தேரில் சென்று கொண்டிருக்கும்போது, குய்-யின் வீட்டு வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது குய்-யின் உறவினர்கள் அவன் முதல்வருக்கு தேரோட்டுவதைப் பார்த்து பெருமிதம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், குய்-யின் மனைவியிடம் ஓடோடிச் சென்று, "விரைவாக வா... உனது கணவர் முதல்வருக்கு தேரோட்டி வருகிறார்" என்றார். உடனே அவளுடைய மனைவியும் ஓடி வந்து பார்த்தாள். ஆனால் குய்-இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தலையை உயர்த்திக் கொண்டு, செருக்கான பார்வையுடன் அவளைக் கடந்து சென்றான். அன்று மாலை வீட்டுக்கு வந்தான் குய். தன் மனைவி சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்த அவன், "நீ ஏன் மிகவும் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டான். "நான் உங்களை விவாகரத்து செய்யப் போகிறேன்..." என்று பட்டென்று சொன்னாள் அவள். இந்தப்பதிலால் அதிர்ச்சியடைந்த குய், "ஏன்...? ஏன் என்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொல்கிறாய்?" என்றான். "நீங்கள்

ஈட்டனும் எழிலும்

அந்த டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.... “சொர்க் சொர்க்” என டீ ஆற்றும் சத்தமும், “சளக் சளக்” எனக் கண்ணாடி டம்ளர்கள் கழுவும் சத்தமும் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தன. “அண்ணே ஸ்ட்ராங்க” ஒரு டீ... மீடியமா ஒரு டீ... சைனா டீ.. காபி, பால், மசாலா பால்” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்... அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு அவரவர்களுக்குத் தேவையான பானங்களை டீ மாஸ்டர் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்... இந்த டீக்கடையில் இருக்கும் சர்க்கரைச் சட்டியை நம்பி, ஈட்டன் என்ற ஈயும், எழில் என்ற எறும்பும் வாழ்ந்துவந்தன. தனக்கு இறகுகள் இருப்பதாலும், எங்கு வேண்டுமானாலும் பறக்க முடியும் என்பதாலும் ஈட்டனுக்கு தற்பெருமை அதிகம். இதைச் சொல்லி எழிலை எப்போதும் கேலி செய்துகொண்டே இருக்கும். இதை ஈட்டன் வாடிக்கையாக வைத்திருந்தது. எழில் இதையெல்லாம் பொருட்படுத்தாது. தனது வேலை மட்டுமே கதி என்று இருக்கும். ஒருநாள்… “எழில்” என்று சத்தமாகக் காதருகே கூப்பிட்டு விட்டு ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்துக் கொண்டு விர்ரென்று பறந்து சென்றது ஈட்டன். வேகவேகமாக ஊர்ந்து கொண்டிரு