Skip to main content

Posts

Showing posts from May, 2016
முன்னப்பின்ன செத்திருக்கீங்களா? கோவிந்தனுக்குத்  தூக்கமே வரவில்லை. நேத்து நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட்ட எலும்புக்கறி கொழம்பா, சுட்ட ஈரலா என்று தெரியவில்லை. பொரண்டு படுத்தான். வலது பக்கமா பொரளும்போது முத்துப்பாண்டியும், இடதுபக்கமா புரளும் போது ராமசாமியும் படுத்துக்கிடந்தார்கள். “எந்திரிங்கடா... எப்பப்பாத்தாலும் தூங்கிக்கிட்டு. என்னிக்காச்சும் நம்மளுக்கு வேலை இல்லயேன்னு கவலப்பட்டிருக்கிங்களாடா?” என்று ஏக வசனம் பேசினான் கோவிந்தன். “திடீர்னு என்னய்யா ஆச்சு இவனுக்கு” என்று புரியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டாய்ங்க முத்துப்பாண்டியும் ராமசாமியும். கோவிந்தன் ரெண்டு பேத்தையும் ஒரு மொறைமொறைத்துவிட்டு... “நம்ம பெரிய பெரிய ஆளுககிட்ட  கூலிக்கு வேல பார்த்து நம்ம ரத்தம் சுண்டுனதுதான் மிச்சம்... நம்மளே தனியா ஒரு தொழில் தொடங்குனா என்ன?” னு கேட்டான். “சுயதொழிலா...?” னு ஒரு எக்காளச்சிரிப்பு சிரிச்ச ராமசாமி. முத்துப்பாண்டிக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் கோவிந்தன் எதாச்சும் சொல்லுவான்னு பேசமா இருந்துக்கிட்டான். “ஏன் செய்ய முடியாதா? முடியும்னு நெனைச்சா முடியும். முடியாதுன்னு நெனைச்...