முன்னப்பின்ன செத்திருக்கீங்களா?
கோவிந்தனுக்குத் தூக்கமே வரவில்லை. நேத்து நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட்ட எலும்புக்கறி கொழம்பா, சுட்ட ஈரலா என்று தெரியவில்லை. பொரண்டு படுத்தான். வலது பக்கமா பொரளும்போது முத்துப்பாண்டியும், இடதுபக்கமா புரளும் போது ராமசாமியும் படுத்துக்கிடந்தார்கள்.
“எந்திரிங்கடா... எப்பப்பாத்தாலும் தூங்கிக்கிட்டு. என்னிக்காச்சும் நம்மளுக்கு வேலை இல்லயேன்னு கவலப்பட்டிருக்கிங்களாடா?” என்று ஏக வசனம் பேசினான் கோவிந்தன்.
“திடீர்னு என்னய்யா ஆச்சு இவனுக்கு” என்று புரியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டாய்ங்க முத்துப்பாண்டியும் ராமசாமியும்.
கோவிந்தன் ரெண்டு பேத்தையும் ஒரு மொறைமொறைத்துவிட்டு... “நம்ம பெரிய பெரிய ஆளுககிட்ட கூலிக்கு வேல பார்த்து நம்ம ரத்தம் சுண்டுனதுதான் மிச்சம்... நம்மளே தனியா ஒரு தொழில் தொடங்குனா என்ன?” னு கேட்டான்.
“சுயதொழிலா...?” னு ஒரு எக்காளச்சிரிப்பு சிரிச்ச ராமசாமி. முத்துப்பாண்டிக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் கோவிந்தன் எதாச்சும் சொல்லுவான்னு பேசமா இருந்துக்கிட்டான்.
“ஏன் செய்ய முடியாதா? முடியும்னு நெனைச்சா முடியும். முடியாதுன்னு நெனைச்சா முடியாது... முடியும்னு நெனைச்சனாலதான் கொலம்பஸ் அமெரிக்காவ கண்டுபிடிச்சான். ரஷ்ய போர் வீரன் விளாதிமிர் ஒபவீரோ ஒபசாஞ்சோ தன்னோட மக்கள ஜெர்மனியின் பாஸிஸ ஹிட்லரின் படைகளிடம் இருந்து இருந்து காப்பாத்துனான்...” னு சொல்லிக்கிட்டிருக்கும்போது “இதுதான் இவர்ட்ட புடிக்காதது” என்று முத்துப்பாண்டி தலையைச் சொறிந்தான்.
மீண்டும் ஒருமுறை முறைத்தான் கோவிந்தன், “முழுசா ஒண்ணு சொல்ல விட்றீங்களா?” என்று திட்டிவிட்டு விஷயத்துக்கு வந்தான்.
“நாம மூணு பேரும் ஒண்ணா சேருவோம். வழியில எவனாச்சும் வருவான் அவனையும் சேத்துக்குவோம். நாலு பேரு ஆச்சு... நாலு பேரு சேர்ந்தா எதுவும் பண்ணலாம்“ என்று சொன்னான்.
இதையெல்லாம் ஒரு வார்த்தை கவனித்தும் ஒரு வார்த்தை கவனிக்காமலும் இருந்த ராமசாமி,
“உண்டாக்கிவிட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலுபேரு
கொண்டாடும் போது ஒருநூறு பேரு
உயிர் கூடுவிட்டுபோனபின்னே கூட யாரு” என்று பாட்டு பாடிக்கிட்டிருந்தான்.
படக்கென்று ஒரு பல்பு எரிந்தது கோவிந்தனுக்கு. உற்சாகமாகத் துள்ளினான். “அடேய் நம்ம பொணம் தூக்குற வேலை செய்யலாம் அதுக்குத்தான் முதலீடே தேவையில்ல” என்றான்.
“நம்மள நம்பி யாரும் பொணம் தருவா?” ன்னு கேள்விகேட்டான் ராமசாமி.
“யாரும் தர மாட்டாய்ங்கதான். வர்ற வழியில ஒருத்தன் இழுத்துக்கிட்டு கிடந்தான். அநேகமா இந்நேரம் போயிருப்பான். நல்லா உப்பி கொழுத்துப்போயிருக்கான். நம்ம மூணு பேரு பத்தாது நாலாவதா ஒருத்தன சேத்தாத்தான் தூக்க முடியும். அவன தூக்கிகிட்டு நாலு தெருவுக்குப் போனம்னா... அடுத்ததா நம்மளுக்கு பொணம் குடுத்திருவாய்ங்க“ என்று சொல்லிய கோவிந்தன் இருவரையும் கூட்டிக் கொண்டு நடையைக் கட்டினான்.
வழியில் இவர்கள் நினைத்தது போலவே ஒருத்தன் வந்தான். அவனையும் சேத்துக்கிட்டாங்க. ஆக நாலு பேர் ஆச்சு... இன்னும் வேகமாக நாலுபேரும் நடந்தாய்ங்க...
கோவிந்தன் நினைத்தது போலவே இழுத்துக்கிட்டுக்கிடந்த அவன் போயேவிட்டான். “நான் சொன்னேன்ல” என்பதுபோல் பார்த்தான் கோவிந்தன். மற்ற மூவரும் கோவிந்தனை தெய்வம் போல பார்த்தார்கள்.
அப்புறமா, மூங்கில் கம்புகளுக்கு நடுவே ஈக்கி வைத்துக்கட்டி ஒரு அழகான பாடையை உருவாக்கினார்கள். அதில் மிகவும் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு பல பாடுகளைப் பட்டு ஏற்றினார்கள் பிணத்தை.
இப்போது இன்னொருத்தனும் வேலை கேட்டு வந்தான். “என்னடா அம்புட்டும் முடிஞ்சபிறகு வேலைக்கு வர்ற” னு கேக்குறமாதிரியே நாலுபேரும் மொறைச்சாங்க... “ஆனாலும் எங்களை நம்பி வந்துட்டே சரி வா”னு அவனையும் கூட்டாளியா சேத்துக்கிட்டாங்க...
முன்னாடி கோவிந்தன் தூக்க, சைட்ல முத்துப்பாண்டி தூக்க, பின்னாடி ராமசாமியும் புதுசா வந்த ரெண்டு பேரும் தூக்க ஆடி அசைஞ்சு போகுதுய்யா பாடை...
ரெம்ப தூரம் போறாய்ங்க போறாய்ங்க... போய்க்கிட்டே இருக்காய்ங்க... ஆனா வலி தாள முடியாமல் கோவிந்தன் கேட்டான் “ஆமா சுடுகாடு எந்தப்பக்கண்டா இருக்கு”
“அடப்படுபாவி இவ்ள நேரம் அதுதெரியாமய எங்கள பொணந்தூக்க வச்ச?” னு ராமசாமி நாவறட்சியில் கத்துன கத்து அந்த அத்துவானக்காட்டுல திரும்பத்திரும்பக் கேட்டுக்கிட்டே இருக்கு எதிரொலி கணக்கா.

Comments
Post a Comment