Skip to main content

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....





செல்போனில்
சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்... 
ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்...
அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது...

----------------------------------------

நாம ஸ்கூல்ல படிக்கும்போது...
சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு... 
உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு... 
உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்... 
உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ...
உன் நண்பனும் அதையே செய்வோன்...
இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ...
இதில் உனக்கு ஒரு சந்தோஷம்... 
இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம்
இந்த விஷயத்தை அப்படியே காப்பி அடிச்சுதான் பேஸ்புக் கண்டுபிடிச்சுருப்பாய்ங்களோ...?

------------------------------------------

ஆலய நுழைவு
வைக்கம் ஆலய நுழைவு போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் பெரியார் ஊர் திரும்பும்போது பிணமாய்த்தான் போக வேண்டும் என்று வேண்டி பெரிய யாகசாலை பூஜை நடத்தினார்கள் குடுமிகள்... 
போராட்டத்தை முடித்து விட்டு பெரியார் , கேரள மன்னர் இறந்து போனார். இந்தச்செய்தி பெரியாரின் காதுக்கு எட்டியது... அப்போது அவருடன் வந்தவர்கள் கிண்டலடித்தார்கள்... அப்போது பெரியார் சொன்னார் "மரணம் அனைவருக்கும் பொதுவானது... சாவை இவர்களின் மந்திரம் உண்டாக்கவோ நிறுத்தவோ முடியாது..." 

------------------------------------
 தம்பதி உரையாடல்...
வீடு காலி செய்து வேறு ஊருக்குச் செல்லும் தம்பதி
மனைவி: அப்பாடியா... இந்த டூவீலர லாரியில ஏத்துறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு... நல்ல வேளை கார் வாங்கியிருந்தா இன்னும்ல சிரமமாயிருக்கும்...? 
கணவன்: கார் இருந்தா அதுலேயே நாம போயிருக்க மாட்டோமா? உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இதுதான்... நீ பயங்கரமா ஜோக் அடிப்ப... ஆனா உனக்கே அது தெரியாது...

------------------------------

வீட்டில் ஒரு உரையாடல்...
"சாமி கும்பிட்டப்பெறகுதான் சாப்டனும்... இல்லேன்னா சாமி கண்ணக் குத்திடும்" என் மகளிடம் - என் மனைவி 
சின்னக்கொழந்தைன்னு கூட பாக்காம கண்ண குத்தும் சாமி எவ்வளவு காட்டுமிராண்டி - இது நான்

---------------------------------

பீஸ்
மொதல்ல 7000 கட்டணுமாம்
அப்பறம் மூணு தவணையா 19500 கட்டணுமாம்
மூணு தவணையா பஸ் பீஸ் 7500 கட்டணுமாம்
பாப்பாவ பாத்தேன்... அவ என்னைப் பாக்குறா...
அப்பத்தான் அந்த டீச்சர் வந்து "சேருங்க சார் நல்ல எதிர்காலம் இருக்குன்னு சொன்னாங்க..." 
யாருக்குச் சொன்னாங்கன்னு தெரியல...

--------------------------------

ஆச்சி
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த என் மகள், "அப்பா ஓரத்துல ஒக்காந்திருந்த தாத்தாவ ஏப்பா இவரு மழைக்குள்ள இழுத்துக்கிட்டு வாராரு" ன்னு கேட்டா... இப்படியெல்லாம் செஞ்சுதான் பாப்பா அவரு ஆச்சியைப் பிடிச்சாருன்னு சொன்னேன்... என்னை ஒருமுறை முறைத்துவிட்டு சானலை மாற்றிவிட்டாள்...

----------------------------

தமிழினத் துரோகி
ஈழத்தைப் பற்றியும் தனி ஈழம் வேண்டும் என்று கோரியும் பேசிக் கொண்டிருப்பவர்களே... இதை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழினத் துரோகிகள் என்று பழிபோட்டுக் கொண்டிருப்பவர்களே... முட்டாள்களே....
ராமதாசுக்கு இப்போதைக்கு அரசியல் பண்ண சாதி எப்படி முக்கியமாக இருக்கிறதோ... அப்படித்தான் உங்களுக்கும் இந்த ஈழ அரசியல் இப்போதைக்கு முக்கியமாக இருக்கிறது... தேர்தலில் இந்த பார்முலா பலிக்கவில்லை என்றால் (கண்டிப்பாக பலிக்காது) என்ன செய்யப்போகிறீர்கள்... இருக்கவே இருக்கிறது பாழாய்ப்போன உங்கள் நாக்கு அதைப்பிடுங்கிக் கொண்டு சாவீர்களா...? 
"தேர்தல் நேரத்தில் இவனை கூட்டுச் சேர்த்தால் சிலபல ஓட்டுக்கள் நமக்கு விழும் என்று அம்மா கணக்குப்போட்டால்போதும்... நமக்கு பல பெட்டிகள் கிடைக்கும்" என்பதுதான் உங்களின் எண்ணம்... அதற்காக இந்த ஆட்டம் போடுகிறீர்கள்... 
இந்த உண்மையை மாணவச் செல்வங்களே புரிந்து கொள்ளுங்கள்... தெளிவாக இருங்கள்... ஒருவன் திடீரென்று வந்து ஏன் இப்படியெல்லாம் ஆக்ரோஷமாகப் பேசுகிறான் என்பதன் பின்னணியை சமரசம் செய்யாமல் அறிந்து கொள்ளுங்கள்... அப்போதுதான் நாடு உருப்படும்...

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...