Skip to main content

பா(ஸ்)த யாத்திரை


"புருஷன் குடியை மறந்து ஒழுங்காக திருந்தி வாழனும்னு வேண்டிக்கிட்டு பழனிக்கு நடந்தே வர்றேன்னு நேந்துக்க... நல்லது நடக்கும்...."

பூசாரி துன்னூறு பூசிக் கொண்டே சொன்னார்...

முருகன் படம் போட்ட காலண்டருக்கு முன்னால் நின்று பூசாரி சொன்னதுபடியே வேண்டிக் கொண்டு விரதமும் இருந்தாள் விருமாயி.
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நாளும் வந்தது...

அரோகரா கோஷத்தோடு வழியனுப்பி வைத்தார்கள்... புருஷன் அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...
நடந்து கொண்டே இருந்தாள்...

வழியில் விருமாயியின் தம்பி வழிமறித்தான்... சிறுவன்தான் என்றாலும் வெடிப்பானவன் அவன்...
"அக்கா தனியாவா பழனிக்குப் போற...?"
"ம்..." என்றபடி நடந்து கொண்டிருந்தாள்...
"திரும்பி எப்ப வருவ?"
"அஞ்சுநாள் ஆகும்.."
"இந்த அஞ்சுநாளும் மாமா குடிச்சு கும்மாளம் போட்டா என்ன பண்ணுவ?"

சுருக்கென்றிருந்தது... சிறிது தூரம் யோசித்துக் கொண்டே வந்தவள்... பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஒருவரிடம் கேட்டாள்...
"அண்ணே... பழனிக்குப் போற பஸ்சு இங்க நிக்குமா?"

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...