அரசியலில் உழைப்பால் உயர்த்தவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆகையால் ஸ்டாலினையும் எனக்குப் பிடிக்கும்... ஐந்து முறை முதல்வராய் இருந்த ஒருவரின் வாரிசு இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது என்று கேட்பவர்களில் ஓரிருவர் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து அவரை “வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை ‘நம்’ தளபதியே” என்று மனதார சொல்ல வைத்துவிட்டேன் என்றால் அதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறேன். சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் ‘தன் வாழ்க்கை இப்படியே போய்விடாது இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாய் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். சிலர் மறுபிறவியை நினைத்து ஏமாந்து போகிறார்கள்... சிலர் இப்பிறப்பிலேயே அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தமக்குத் துணையாக மகனையோ மகளையோ அல்லது தலைவனையோ நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறார்கள்... அந்த நட்சத்திரம் துருவநட்சத்திரமாய் இருள் சூழ்ந்த நம் வாழ்வில் வெளிச்சக் கீற்றை பரவச் செய்யும் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உயிர் வாழ்வதற்கான அச்சாணி இந்த ஒரேயரு நம்பிக்கையில்தான் இருக்கிறது. இப்படி ஒரு மகனாக, தலைவனாக...