Skip to main content

"வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை , நம் தளபதியே "

அரசியலில் உழைப்பால் உயர்த்தவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆகையால் ஸ்டாலினையும் எனக்குப் பிடிக்கும்... ஐந்து முறை முதல்வராய் இருந்த ஒருவரின் வாரிசு இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது என்று கேட்பவர்களில் ஓரிருவர் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து அவரை “வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை ‘நம்’ தளபதியே” என்று மனதார சொல்ல வைத்துவிட்டேன் என்றால் அதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.

சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் ‘தன் வாழ்க்கை இப்படியே போய்விடாது இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாய் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். சிலர் மறுபிறவியை நினைத்து ஏமாந்து போகிறார்கள்... சிலர் இப்பிறப்பிலேயே அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தமக்குத் துணையாக மகனையோ மகளையோ அல்லது தலைவனையோ நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறார்கள்...  அந்த நட்சத்திரம் துருவநட்சத்திரமாய் இருள் சூழ்ந்த நம் வாழ்வில் வெளிச்சக் கீற்றை பரவச் செய்யும் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உயிர் வாழ்வதற்கான அச்சாணி இந்த ஒரேயரு நம்பிக்கையில்தான் இருக்கிறது. 

இப்படி ஒரு மகனாக, தலைவனாக ஸ்டாலினை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். கூடை நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் ஒருசில ஆதாரங்களை உங்கள் சட்டைப்பையில் வைக்கிறேன்... 

சொல்லல், சொன்னபடி நடத்தல்... மக்களோடு மக்களாக வாழ்தல்... இந்தப் பண்புகள் தலைவனுக்கு அழகு. இந்தப் பண்புகள் அவருக்கு எப்போதோ வந்துவிட்டன. என்பதற்குச் சாட்சி சென்றமுறை அவரின் உழைப்புக்குக் கிடைத்த துணை முதல்வர் பதவி. எந்த தொகுதிக்குப் பிரச்சாரம் போனாலும் அவர் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு மக்கள் அவரை பார்க்கும் பார்வையே அன்பை-தலைமையை- அந்தப் பார்வை இன்னொரு உத்வேகத்தையும் அளிக்கும்  ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம் தளபதியே’ என்று.

சென்னை மேயராக இருந்தபோது, நான் முதல்வராய் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் ஸ்டானின் முதல்வராக இருப்பதா? கூடாது... இவனது ஆக்கபூர்வ திட்டங்களின் முன்னால் நாம் எடுபடமாட்டோம் என்று நன்றாகத் தெரிந்திருந்ததால்தான் என்று மாநகராட்சியையே கலைக்கும் அளவுக்குச் சென்றார் “மக்கள் முதல்வர்” என்ற போர்வையில் கதகதப்பாய் வாழும் அந்த அம்மையார். இந்த நிகழ்வு ஒன்றே போதும் எதிரிகளுக்கு ஸ்டாலின் எவ்வளவு சிம்மசொப்பனமாய் இருக்கிறார் என்பதற்கு. 

எத்தனை கோடி அம்புகள் ஊடகங்களால் எய்யப்பட்டாலும் அவை மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின் முன் முனைமழுங்கி விழுகின்றன. மாற்றுக்கட்சியினர் இவரைக் கண்டவுடன் கைகுலுக்கியோ கட்டியணைத்தோ நெருங்கமாக இருப்பதையும் கண்டு வருகிறோம். எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்துவதிலும், தோழமைக் கட்சிகளிடம் அன்யோன்யமாக இருப்பதிலும் இவர் கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பது இந்த நிகழ்வுகளின் மூலம் எளிதாக விளங்கும்.

ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆகும் நிலை வந்த போது எதிர்த்தார்... சட்டமன்ற வேட்பாளராக முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதும் எதிர்த்தார் நம் கலைஞர்... பக்குவப்பட வேண்டும்... அது இயல்பாகவே அமைய வேண்டும் என்று அவர் நினைத்ததால்தான்...

இப்போது அவரே சொல்கிறார் “6வது முறையாகதான் முதல்வராக விருப்பமில்லை என்று...” ஆக இளைஞர்களுக்கு மட்டும் அல்ல... திமுக தலைவருக்கே ஒரு நம்பகமான தலைமை கிடைத்து விட்டது. 

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...