மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார்.
உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு.
"ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்....
இது எதற்கு இப்போது என்கிறீர்களா?
காரணம் இருக்கிறது....
தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.
நிற்க...
இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இவர்களில் 10 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்... இதன் மூலம் அதிக அமைச்சர்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் மாநிலம் பெற்றுள்ளது.
அதுமட்டுமா பிரதமரை கொடுத்த மாநிலம் என்ற பெருமையும் உத்தரப்பிரதேசத்துக்கே கிடைத்துள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
இதனைத்தொடர்ந்து மிகமிக பின்தங்கிய மாநிலமான மகாராஷ்டிரா 7 அமைச்சர்களுடனும் அதைவிட பின்தங்கிய மாநிலமான பீகார் 6 அமைச்சர்களையும் தந்து அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றன.
கல்வியிலும், வேலைவாய்ப்பை அளிப்பதிலும் மற்ற எல்லா மாநிலங்களைவிடவும் பலபடிகள் முன்னேறியுள்ள தமிழகம் பிரதிநிதித்துவப்படுத்தப்படவே இல்லையே... என யாரும் கோபமோ வருத்தமோ படவேண்டியதில்லை.
தமிழ்நாட்டு மக்கள் இதுவரை அறியாத தமிழர்களைத் தேடிக் கண்டுப்பிடித்து அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த முறை நிர்மலா, இந்த முறை ஜெய்சங்கர். நிர்மலா சீதாராமனை பொதுவெளியில் தமிழக மக்கள் பார்த்ததே இல்லை. அவர் எந்த தேர்தலிலும் ஓட்டுக்கேட்டு தமிழக மக்களையும் பார்த்ததில்லை.
ஆனால் தமிழர் அமைச்சராகி விட்டார் என்று காட்சி ஊடகங்கள் இதனைப் பெருமையுடன் ஒளிபரப்புகின்றன. வியந்து போற்றுகின்றன.
தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் இருவரும் என்னென்ன 'செய்யப் போறாங்க'ன்னு பார்த்துட்டு அடுத்த தேர்தலில் மோடிக்கு 'நன்றி' தெரிவிக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.
பொறியியல் படித்துவிட்டு செமாட்டோவில் உணவு கொண்டு செல்லும் பணியில் கருமமே நம் தமிழக பொறியாளர்கள் சுற்றிக் கொண்டிருக்க, தமிழக மின்துறையில், பொறியாளர்களாக வடமாநிலங்களைச் சேர்ந்த 12 சதவீதம் பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்கள் நினைவில் வந்துபோனால் கம்பெனி பொருப்பல்ல...
ஜெய்ஹிந்த்...
Comments
Post a Comment