பச்சை முண்டாசு “வணக்கம்ணே” என்-று சொல்லிவிட்டு அரசமர நிழலில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் பாண்டி. பாண்டிக்கு விவசாயத்தைத் தவிர ஒண்ணுந்த தெரியாது. செடி கொடிககூடத்தான் அவர் பேச்சு பொழப்பு எல்லாம். சில நேரம் வந்து அரசமரத்து நிழல்ல குந்துவார். அப்போதைக்கு அங்கு யாரு இருக்காங்களோ அவுங்ககிட்ட அரசியல் நிலவரம் பற்றி கேட்டுக்குவார். அவருக்கு ரெம்பவும் பிடிச்சவரும், அரசியல் நிகழ்வுகளை அள்ளிக் குடிச்சவரும் ஆன கோமாளி (பேரே அதுது£ன்)தான். அவருக்குத்தான் வணக்கம் சொல்லி விட்டு குந்தினார். “என்னண்ணே வணக்கம் பெருசா இருக்கு” என்று கேட்டு விட்டு மீசையைத் தடவி ஒரு சிரிப்பு சிரித்தார். ஒரு நாளிதழ் பக்கத்தில் கிடந்தது. அவருக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் படம் பார்த்து, அதில் சுவராஷ்யமா எதாச்சும் இருந்தா படிக்கச் சொல்லி கேட்டுக்குவார். “இந்தப் பச்சத்துண்ட தலைல முண்டாசு கட்னவரு என்னண்ணே சொல்றாரு...?” என்றார். “விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன்-” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் தி...