Skip to main content

பச்சை முண்டாசு


“வணக்கம்ணே” என்-று சொல்லிவிட்டு அரசமர நிழலில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் பாண்டி.
பாண்டிக்கு விவசாயத்தைத் தவிர ஒண்ணுந்த தெரியாது. செடி கொடிககூடத்தான் அவர் பேச்சு பொழப்பு எல்லாம்.
சில நேரம் வந்து அரசமரத்து நிழல்ல குந்துவார். அப்போதைக்கு அங்கு யாரு இருக்காங்களோ அவுங்ககிட்ட அரசியல் நிலவரம் பற்றி கேட்டுக்குவார்.
அவருக்கு ரெம்பவும் பிடிச்சவரும், அரசியல் நிகழ்வுகளை அள்ளிக் குடிச்சவரும் ஆன கோமாளி (பேரே அதுது£ன்)தான்.
அவருக்குத்தான் வணக்கம் சொல்லி விட்டு குந்தினார்.
“என்னண்ணே வணக்கம் பெருசா இருக்கு” என்று கேட்டு விட்டு மீசையைத் தடவி ஒரு சிரிப்பு சிரித்தார்.
ஒரு நாளிதழ் பக்கத்தில் கிடந்தது.
அவருக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் படம் பார்த்து, அதில் சுவராஷ்யமா எதாச்சும் இருந்தா படிக்கச் சொல்லி கேட்டுக்குவார்.
“இந்தப் பச்சத்துண்ட தலைல முண்டாசு கட்னவரு  என்னண்ணே சொல்றாரு...?” என்றார்.
“விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன்-” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் திடீர் அறிவிப்பு”
என்று சத்தமாய்ப் படித்தார் கோமாளி.
முகம் சிறுத்தது.
கொஞ்சநேரம் பேசாம இருந்தார்.
பின்பு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.
“அண்ணே ஒங்களுக்குத் தெரியாதது இல்ல. மண்ணை தோண்டுறவன் பொழப்பு எப்படிப் பட்டதுன்னு? ஆனா இவங்க மாதிரி ஆளுங்க இப்டியெல்லாம் சபதமேத்துக்கிறதால யாருக்கு நன்மை கெடச்சிரும்?
பேஞ்சு கெடுக்குது... பேயாமயும் கெடுக்குது... வானத்தப் பார்த்து நிக்கிற நமக்கு இந்த மாதிரி ஆளுங்கனால ஏதாச்சும் கெடச்சிருக்கா...
இவனுங்கள நம்பி போராட்டத்துக்கு போயி அன்னிக்கு பொழப்பு கெட்டதுதான் மிச்சம். ஆனா இவ்ளோ விவசாயிகள் என் பின்னாடி இருக்கிறதா இவனுங்க மட்டும் கல்லா கட்டீடுறானுங்க...
இந்த ஆளெல்லாம் 20 வருஷமா எலக்ஷன்லயே நிக்கல... இப்பத்தான் நிக்கிறாரு... இத்தனை வருஷமா எப்படிண்ணே அந்த ஆளு பொழப்பு ஓடுது... யோசிச்சாய்ங்களா...
பதவியில இருக்கவந்தான் அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டயப்போட்டுட்டு பொழப்பு நடத்துறான்... இவனுங்க மாதிரி ஆளுகளுக்கு எங்க இருந்துண்ணே கெடைக்கிறது காசு?...
இப்டியெல்லாம் பேசிப்பேசியே நம்மள வச்சி அவனுங்க வாழ்றானுங்கண்ணே”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் குடித்துக் கொண்டார். “அண்ணே ஒரு டீ சாப்டலாமா?”என்றும் கேட்டார்.
“சாப்டுவோம்ணே” என்று கோமாளியும் சொல்ல... இவரின் பார்வையை குறிப்பால் உணர்ந்த பொட்டிக்கடைக்காரர் “பெரிசு ரெம்ப கோவமா இருக்குபோல” என்று கோமாளியின் காதைக் கடித்துவிட்டு டீ கொண்டு வந்து கொடுத்தார்.
டீயை உறிஞ்சிய பாண்டி,
“இதுதான்... இப்டித்தான் என்று பட்டுன்னு சொல்றவன நம்பலாம்... ஆனா  இந்த ஆளு மாதிரி உணர்ச்சி வசமா பேசுறவங்கள எந்தக்காலத்துலயும் நம்பக்கூடாது... குடியக் கெடுத்துருவானுங்க... என்னைக்கும் நம்மளோட இருக்கிற ஆளுதாண்ணே நம்மளுக்கு வேணும்...” என்று சொல்லிவிட்டு டீக்கு காசு கொடுத்துக் கொடுக்கப் போனார்.
மரத்திலிருந்து காய்ந்த இலைகள் கீழே விழுந்து கொண்டிருந்தன.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...