அபிநந்தன் என்ன சாதி என்று கூகுளில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் தேடியிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது. இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது. இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன். இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாத...