Skip to main content

அபிநந்தன் என்னும் பெயரில் பெரியாரின் பங்கு

அபிநந்தன் என்ன சாதி என்று கூகுளில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் தேடியிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.
இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன்.
இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாதி மீது மென்மையான போக்கு உள்ளவர்கள் அபிநந்தன் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தேடியிருக்கிறார்கள் என்று கூகுள் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே அபிநந்தன் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ அல்லது வடமாநிலங்களிலோ பிறந்திருந்தால் அபிநந்தன் நாயர், அபிநந்தன்ரெட்டி, அபிநந்தன் முகர்ஜி, அபிநந்தன் நாயுடு என்றெல்லாம் அவரது ஜாதி பெயரிலேயே இருந்திருக்கும்... ஆனால் அவர் பிறந்தது தமிழ்நாட்டில் அல்லவா.
1928ம் ஆண்டிலேயே நீதிக்கட்சி மாநாட்டில் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். அது முதற்கொண்டு பலர் தங்களின் பெயருக்குப்பின்னால் ஒட்டிக்கொண்டிந்த சாதிப்பெயர்களை வெட்டி எறிந்தார்கள்.
நீங்கள் உங்கள் தந்தை காலத்தில் அடிக்கப்பட்ட கல்யாண பத்திரிகையையும் இப்போது உங்கள் கல்யாணத்தில் அடிக்கப்படும் கலயாண பத்திரிகையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... அதில் தாத்தாக்களின் பெயர்களுக்குப்பின்னால்தான் சாதி இருக்கும். மற்ற யாருக்கும் சாதி அடையாளங்கள் இருக்காது. இப்போது மூன்றாவது தலைமுறையில் தாத்தாக்களின் பெயர்களிலும் சாதி இருக்காது என்ற நிலை வந்து விட்டது.
இப்படியாக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பெரியார் சாதித்ததுதான் இது.
ஆனால் இவ்விதம் சாதி அடையாளத்தை துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரின் பெயருக்குப்பின்னால் குரூப் 2 வினாத்தாளில் ராமசாமி நாயக்கர் என்று அச்சேற்றி சுகம் கண்டவர்கள்தான் நமது சோ கால்டு அறி(வீ)வாளிகள்...
சாதி ரீதியான பார்வையைத் தவிர்ப்போம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்வோம்...

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...