எல்லாவற்றையும் போலீஸ் உதவியோடு அதிமுகவினர் மறைத்துவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமான கவுண்டர் பெண்களும் இருக்கிறார்களாம். கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளில் அழகான பெண்களை இந்த கும்பல் சுற்றிவந்து கடத்தி கற்பழிப்பது கடந்த 8 ஆண்டுகளாக தொடர்கதையாம்...
வெளியாகும் தகவல்கள் பொள்ளாச்சியை மட்டுமல்ல தமிழகத்தையே நடுங்க வைக்கின்றன...
சின்னப்பம் பாளையம்
பண்ணை வீடு..
பண்ணையார் வீட்டுப் பையன் திருநாவுக்கரசு அவனது நண்பன் ஆச்சிப்பட்டி மணிகண்டன்,சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த்,வசந்தகுமார், கெரோன்,அதிமுக 'பார்' நாகராஜன் உள்ளிட்ட பத்து பேர் சேர்ந்து செய்திருக்கிற காமவெறியாட்டமும் மாட்டை அடிப்பதைப்போல பெண்களை அடிக்கும் கொடூர சம்பவங்களும் மனதை பதைபதைக்க வைத்திருக்கின்றன.
வேலைக்காகவும், கல்லூரிக்குப் படிக்கவும் வரும் இளம்பெண்களை தமது பணத்தாலும் காதல் வார்த்தைகளாலும் வசப்படுத்தி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணை வீட்டில் வைத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்து வீடியோ எடுத்துள்ளனர் இந்த கொடூர வெறிப்பிடித்த ஓநாய்க்கூட்டங்கள்.
மொத்தமாக,1100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியுள்ள நிலையில், இந்தக் கும்பலிடம் சீரழிந்த பெண்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகமாக உள்ளதாக வரும் செய்திகள் நம்மை மூர்ச்சை அடையச் செய்கின்றன..
எடுத்த வீடியோக்களை அதிகார பலமிக்க அரசியல் பெரும்புள்ளிகளுக்கு அனுப்பியதுடன், அவர்கள் விரும்பிய பெண்களையும் வீடியோக்களை வைத்தே மிரட்டி, கூட்டிக் கொடுத்துள்ளனர்.
காட்டியும் கூட்டியும் கொடுப்பதற்கு காரணம் நிலவுடைமையும், ஜாதி ஆணவமும், அரசியலும் சேர்ந்து நிகழ்த்திய பாலியல் வன்முறை ஆகும்.
ஒரு வகையில் இதுதான் தமிழகத்தின் அத்தனை அசைவினையும் தீர்மானிக்கும் சமூக பொருளாதாரக் கூட்டணியுமாகும்.
இந்த மைனர்த்தனமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கவே நாட்டாமை,சூர்யவம்சம்,கவுண்டர் வீட்டுப்பொண்ணு,தேவர் மகன்,எஜமான் உள்ளிட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதையெல்லாம் கைதட்டி ரசித்தவர்கள் இதற்குப்பின்னால் உள்ள சமூக அடுக்குகளை கண்டும் காணாமல் விட்டதன் பின்னணிதான் இத்தனை வக்கிரங்களுக்கும் காரணம்.
நன்கு படித்த வசதியுள்ள பட்டியலின இளைஞர்கள் ஒரு சிலர் ஜாதியை மீறிக் காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டபோது, அதை காதல் நாடகமென வர்ணித்து ஆணவக் கொலைகளைத் தூண்டிய பாமக ராமதாசும் அவரது அடிப்பொடிகளும் இப்போது நடந்துள்ள கண்டு கள்ள மௌனம் காத்து வருகின்றனர்.
காதலர் தினம் வந்தவுடன் கலாச்சாரக் காவலர் அவதாரம் எடுக்கும் காவிக்கூட்டங்களும் இப்போது வாய் திறக்கவில்லை.
தமிழ்க் கலாச்சாரவாதிகள் பரப்பில் திருடனுக்குத் தேள் கொட்டியது போன்ற மௌனம் நிலவக் காரணம், இதில் நேரடியாகச் சிக்கியிருப்பது இவர்களின் தறுதலைப் பிள்ளைகளே.
இவர்கள் தான் சமூக ஊடகங்களில் ஷத்ரிய உளறல்களை ஆண்ட ஜாதி ஆணவக் கதைகளைப் பரப்பி வருபவர்கள்.
மறுபுறம், இவர்களே ஒழுக்கம் பண்பாடு பற்றி மொத்தச் சமூகத்துக்கும் பாடம் எடுப்பவர்கள். ஆனால், பிட்டுப் படம் எடுப்பதும் பாலியல் வல்லுறவுமே இவர்களது அசல் முகமாக இருக்கிறது.
தேர்தல் வெற்றி தோல்வியைத் தாண்டி, இந்த ஜாதி ஆணவ மதவெறிக் கும்பலானது, சமூக அமைதிக்கு மட்டுமல்ல குற்றச் சமூகங்களின் பாலியல் வணிகத்துக்கும் அடாவடிகளுக்குமே சாதகமாக இயங்கவல்லது என்பது குறித்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் பேசி, விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.
ஆண்டபரம்பரை பேசி சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீதும், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களில் சாதிப்பெருமை பேசி பிளக்ஸ் அடிப்போர் மீதும் காவல்துறை ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment