Skip to main content

அனைவருக்கும் பொதுவானவர்

கலைஞர் இருக்கும்போதும் இறந்தபின்னும் செய்தது அந்த போராட்டம்தான்...
நேரிடையாக மோடியை சந்தித்து அவருக்கான இடத்தை மெரீனாவில் எளிதாக வாங்கியிருக்க முடியும் ஸ்டாலினால் ...
ஆனால் சில சமாளிப்புகளை செய்திருக்க வேண்டும்...
அதையெல்லாம் விடுத்து இங்கே உள்ள எடப்பாடியை சந்தித்து அதை அவர் மறுத்து அதன்பின் நீதிமன்றம் சென்று வாங்கியதே இப்போது கொண்டாடப்படும் விஷயமாகியிருக்கிறது...
அதேபோன்றுதான் திருமாவளவன் விஷயத்திலும் நடந்திருக்கிறது...
உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட்டு எளிதாக இந்த வெற்றியை ருசித்திருக்க முடியும்.
ஆனாலும் திருமாவளவன் என்பவர் இத்தனை நாட்களாக நடத்திய சமூகநீதி, சனாதன எதிர்ப்பு பிரச்சாரம், சாதிய ஒற்றுமை, சாதி ஒழிப்பு போன்ற பிரச்சார முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள மேற்கொண்ட அபாயகரமான முயற்சியே பானைச் சின்னத்தில் அவர் போட்டியிட்டது...
அந்த முயற்சியில் கடைசி நிமிடம் வரை சோதனை நிறைந்ததாக இருந்தாலும் போராடி அவர் பெற்ற வெற்றிதான் இப்போது கொண்டாடப்படும் விஷயமாகி விட்டது....
அதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "சிதம்பரம் தொகுதியில் கலைஞர் நிற்கிறார்" என்று அறிவித்தாரோ என்னவோ...
திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது...
"ஆம்... எல்லோரையும்போல் வெற்றி தலித்களுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித்தொகுதியாக இருந்தாலும்"
& இவ்விதம் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ரஞ்சித்தின் ஆதங்கம் ஒருவகையில் சரியே என்றாலும் அவருக்க சில கேள்விகள்..
தலித் வெற்றிபெற போராட வேண்டுமெனில் எதிர்த்து நின்றவரெல்லாம் தலித் அல்லாதவர்களா? தனித்தொகுதி என்றால் அப்படித்தானே போட்டியிட முடியும்.
ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானதல்ல என்று சொல்லவருகிறீர்களா?
இவ்விதம் ரஞ்சித் ஆதங்கப்பட்டு பேசுகிற தலித் அரசியல்தான், திருமாவளவன் வெகுஜன அரசியலுக்கு வந்தாலும் அவரை தங்கள் எதிரியாக கருத வைக்கிறது... அல்லது கருத வைக்கப்பட வைக்கப்படுகிறது சில ஆதிக்கவெறிக் கூட்டங்களால்...
சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு தலித்துகள் மட்டும் வாக்களிக்கவில்லை. அனைத்து சமூகத்தினரும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால்தான் தங்கள் தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றுவார் என்று நம்பியதால் தங்கள் வாக்கை அவருக்கு செலுத்தியிருக்கிறார்கள்.
திருமாவின் வெற்றி சிரமமாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, திருமாவளவனின் வெற்றிக்காக தன் சொந்த வன்னிய சாதி மக்களை திருமாவை நோக்கி திரும்பியதால் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கருக்கு இருக்கும் பெரும் பங்கையும் மறந்துவிடக்கூடாது ரஞ்சித் சார். இதுவும் ஒருவகை சாதிய இணைப்பும் நல்லிக்கணமும் நிறைந்த நடவடிக்கைதான்...
திருமாவை கற்றறிந்தோர்... அவர் எழுதியதைப் படித்தோர்... பேசும் அற்புதக்கருத்துக்களைக் கேட்டோர் அனைவரும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அவரை பார்க்க விரும்புகிறார்கள்.
மக்களவையில் அவரது அறிவார்ந்த குரல் ஒலிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கும் சாதிகளுக்கும் அப்பாற்பட்டு விரும்பியவர்களை ரஞ்சித்துகள் சாதி அரசியலுக்குள் இழுக்கப் பார்ப்பது தவறான பார்வை.
முனைவர் திருமாவளவன் அனைவருக்கும் பொதுவானவர்... அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...