ஏழரைப் பங்காளி வகையறா நாவலுக்கான
எனது விமர்சனக் கடிதம்
-------------------------- -------------------------- -
அன்புத்தோழர் அர்ஷியாவுக்கு வணக்கம்
இந்தக் கடிதத்தை ஏற்கெனவே எழுதியிருக்க வேண்டும்... நேரமின்மை மற்றும் தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக இப்போதுதான் எழுத அமர்ந்திருக்கிறேன் ஒருவிதப் பெருமிதத்தோடு....
ஒரு நாவல் படித்து மிகுந்த உற்சாகத்தோடு நான் எழுதிய கடிதங்களில் இது இரண்டாவது கடிதம்... கதைக்குள்போகாமல் இவ்வளவுநேரம் பேசிக் கொண்டிருப்பது எனக்கு என்னவோபோல் இருக்கிறது...
உள்ளே வந்து விடுகிறேன்...
நாவலை ஆரம்பிக்கும்போது கதாபாத்திரங்களின் பெயர்கள், தொடர்ச்சியாக வாசிப்பதற்கு இடைஞ்சலை ஏற்படுத்தின... (நான் வாசித்த நாவல்களில் இஸ்லாமிய பெயர்கள் தாங்கிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்பதுகூட காரணமாக இருக்கலாம்) பின்னர் பக்கங்கள் செல்லச்செல்ல அந்தப் பெயர்கள் பரிச்சயமாகின. “நான் இப்படித்தான் வேண்டுமா வேண்டாமா” என்று தாவூது போல் முறுக்கிக் கொண்டன... வேண்டும் வேண்டும் என்று சொல்லியபடியே நான் படிக்க ஆரம்பித்தேன்...
ராஜாக் சாயபு சேர்த்த சொத்து, அபீல்பீ மூலமா வந்த சொத்து உள்ளிட்ட சொத்துக்களை வைத்துக் கொண்டு என்னசெய்வதென்றே தெரியாத தாவூதுவிடம், “வேலை செய்யாமல் எப்படி உங்களுக்கு பொழுது கழிகிறது?” என்று கேட்கும் அப்பாவித்தனம், அதை நாசூக்காக எடுத்துரைக்கும் பாங்கு நாவலின் கடைசிவரை அந்தப் பெண்ணின் தைரியத்தைச் சொல்லும் சாட்சிகள்...
பொசுக்கென்று வழிந்து விடுவதும்... பொசுக்கென்று கோபப்படுவதும்... இழந்தபின் இழக்காத கவுரவமும்... குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு, பின் மனசுபொறுக்கமாட்டாமல் மீண்டும் வந்து அவர்களைத் தேடுவதில் உள்ள அன்புக்கோழைத்தனமும், மனைவியைக் காண முடியாமல் கூசிப்போகும் மனோசித்ரவதையும் தாவூதின் மீது மிகுந்த இரக்கத்தை ஏற்படுத்துகிறது...
“அடப்பாவி உனக்கா இந்தக் கேடு” என்று மைண்ட் வாய்சில் பேசுகிறேன் என்று நினைத்து சத்தமாகவே பேச வைத்துவிட்டன என்னை... மேலும் வேலையை விட்டு நின்னப்புறம் “இன்னிக்கு லீவா” என்று மற்றவர்கள் கேட்கும்போது உள்ள தர்மசங்கடத்தை தாவூதுபோல நானும் அனுபவித்திருக்கிறேன்...
வெற்றிலை போடுவது, மீன் பிடிப்பது, பெரியாஸ்பத்திரி அட்மிஷன் போடுவது, பள்ளியில் சத்துணவு வாங்கிச் சாப்பிடுவது என்று பல விஷயங்கள் மனதை கிளறி விதை முளைக்கச் செய்பவை...
குத்தூஸ்-சின் நரித்தனம், அவர் நடத்தி வைத்த பிரம்மாண்ட கல்யாணம், கணக்குச் சொல்லும் இடம், பத்திரப்பதிவு, கடைசியில் தாவூதிற்கு உதவுவது என்று அவர் தனித்து நிற்கிறார்.
உசேன், அவனது நண்பன் பாண்டி அவர்களது நட்பு அருமை.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்... 400 பக்க நாவலை ஒரு ஏ4ல் எழுதுகிறேன் என்ற குற்றவுணர்வு இருக்கிறது...
“கவுரதையும் ரோஷமும் நாலுநாளைக்கு கூடவருமா? அப்புறம் பசிக்குமே!”
“மனுஷன் தன்னோட சுயத்தை இழக்குறது பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடுறப்பத்தான்”
- இவையிரண்டும் என்னை இன்னமும் ஏதோ செய்து கொண்டே இருக்கின்றன.
எனது விமர்சனக் கடிதம்
--------------------------

Comments
Post a Comment