"மேகமாக இருந்ததால் போர்விமானங்களை பாகிஸ்தானால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இப்போது தாக்குங்கள்,' என ராணுவத்துக்கு ஐடியா கொடுத்தேன்," என மோடி பேசியிருக்கிறார். வழக்கம்போல மோடியின் அடிபொடிகள் "ஆஹா... செம ஐடியாக்காரன்பா," என மோடியைப் புகழ்கிறார்கள்.
அறிவுள்ள மீதி உலகம் கிண்டல் செய்கிறது. இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார். அவர் சீமான்.
அவர் அள்ளிவிட்ட பொய்கள் சொல்லி மாளாது.
ஆமைக்கறி சாப்பிட்டது, ஆமை ஓட்டைத் திருப்பி போட்டு படகாக மாற்றி பயணம் செய்தது, அரிசிக்கப்பலைக் கடத்தியது, 1 லட்சம் யானைகளை போர்க்கப்பலில் ஏற்றிச் சென்று போரிட்டது, நம்மாழ்வார் பலாமரத்தைக் கட்டிப்பிடித்து அதனை பழம் பழுக்கும்படி செய்தது, ஏ.கே.74 துப்பாக்கியை பயன்படுத்தியது, கலைஞரின் பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு பழக்கம், திருக்குறளை தப்புத்தப்பாக அர்த்தம் கற்பிப்பது, பிரபாகரன் இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ தனி ஈழம் வாங்கியிருப்பேன் என்றது, எம்ஜிஆர் முதல்வராக பதிவியேற்ற போது பெரியார் வந்தார்ன்னு சொன்னது.. (எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்றபோது பெரியார் இறந்து போய் 5 ஆண்டுகள் ஆகியிருந்தது) என்னால்தான் பிரபாகரனை போராளி என்று தெரியும்.... அதற்கு முன் தீவிரவாதிதானே என்றெல்லாம் அவர் சொன்ன பொய்களை கணக்கு வைக்க முடியாது.
சீமான் சொல்லிய பொய்கள் என்று குறுநூல் போட்டுத்தான் விற்க வேண்டும். அந்த அளவுக்கு மலைமலையாய் பொய்கள்.
இதனையெல்லாம் அவர் தெரிந்துதான் செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கிறாரா? என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் ஒரு இளையோர் சமுதாயத்தை தவறான தகவல்களைச் சொல்லி தவறான முன்னுதாரண அரசியல்வாதியாக இருக்கிறார் என்று மட்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியும்.
மணல், கிராணைட் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைகுண்டராஜன், பிஆர்பி ஆகியோரை எதிர்த்து சீமான் நடத்திய போராட்டங்கள் எத்தனை?
ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், விவசாயம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் அவர் நடத்திய போராட்டங்கள் எத்தனை என்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்..
அப்படியே மோடியின் பக்கம் போவோம்...
மக்கள் பிரச்சனையை மோடி கண்டு கொள்வதே இல்லை. எப்போது பார்த்தாலும் சர்ஜிக்கல் ட்ரைக், பாகிஸ்தான் நம்மைப் பார்த்து பயப்படுகிறார்கள்... தீவிரவாதிகள் அஞ்சி ஓடுகிறார்கள்... இந்த சாதனைகளை எதிர்க்கட்சிகள் பாராட்ட மறுக்கின்றன என்று சொல்லி தேசபக்தியோடு முடிச்சிப்போட்டு மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்.
தற்போது அவர் அனைத்திற்கும் உச்சமாய் மேகத்தைக் காட்டி நான்தான் ஐடியா குடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
மக்களின் உண்மையான தேவைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்கள் போன்றவர்கள் பேசி வருவது மேலும் மேலும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களை தவறான பாதைக்கும் அல்லது மேலும் மேலும் ஏழ்மை நிலைக்குச் செல்லவுமே வழிவகுக்கும்.
மக்களை நோக்கித் திரும்பும் அரசியல்வாதிகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Comments
Post a Comment