மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம். நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...
மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...