Skip to main content

Posts

Showing posts from 2013

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

இறைவன் கொடுத்த ஊதியம்

முல்லாவுக்கு நிரந்தவேலை எதுவும் இல்லை. ஏதோ ஒரு வழியில் வரும் பணமும் விருந்து அன்றாட குடும்பச் செலவுகளுக்கே சரியாய்ப்போய் விடுகிறது. இதுசம்பந்தமாக எத்தனையோமுறை குல்ஷான் சண்டையிட்டிருக்கிறாள். ஆனால் நிரந்த வேலைக்குச் செல்லும் எண்ணம் துளிகூட முல்லாவிடம் இல்லை. அன்று காலையும் அப்படித்தான். முல்லா தனது கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்தபடி கால்களை ஆட்டிக் கொண்டு பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கோபமாக வந்த குல்ஷான், "இப்படியே எத்தனை நாட்களை ஓட்டப்போகிறீர்கள்... நிரந்தர வருமானம் இருந்தால்தானே நாம் சுகமாக வாழ முடியும்...? உங்களின் சொந்த முயற்சியில் எதையேனும் உருவாக்கியிருந்தாலும் பரவாயில்லை... இங்கு அதுவும் கிடையாது..." என்று அலுத்துக் கொண்டாள். "எனது சொந்த முயற்சியில் தாடியையும் மீசையையும் வளர்த்திருக்கிறேனே.." என்று கேலியாகச் சொன்ன முல்லா, "பொறுமையாக இரு... அல்லா நமக்குக் கொடுப்பார்..." என்றும் நம்பிக்கையளித்தார். "ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அல்லா உணவளிக்கமாட்டார். நீங்கள் உங்களின் பணக்கார நண்பர்களிடம் சென்று வேலை கேட்டால் என்ன?...

எடிசனும்... மாரியக்காவும்... - சிறுகதை

என்னமோ காளிமுத்து மட்டுந்தேன் இந்த எட்டு ஜில்லாவிலேயே பத்தாவது படிக்கிற மாதிரியும், அவுங்க ஸ்கூலு ஆண்டு விழா என்னமோ அவனுக்கு மட்டுந்தேன் நடந்த மாதிரியும், அந்த விழாவுல பேச வந்தவரு இவன்கிட்ட மட்டுந்தான் பேசினமாதிரியும் அவுங்க அம்மா பஞ்சவர்ணத்துக்கிட்ட பள்ளிக்கொடக் கதய தயாரிப்பாளர்கிட்ட புது டேரக்டரு அழுதுகிட்டும் சிரிச்சிக்கிட்டும் ஆக்ஷனோட சொல்லுவாரே அதே மாதிரி சொல்லிக்கிட்டிருந்தான். கத புடிக்கலேன்னா, அப்பறம் பாக்கலாம்னு தயாரிப்பாளர் எந்திரிச்சுப் போயிருவாரு, ஆனா பஞ்சவர்ணம் தயாரிப்பாளரில்லை என்பதாலும், அவனைப் பெற்ற தாய் என்பதாலும், இவன் சொல்றது அத்தனையும் அவன் மனசு நோகக்கூடாதுன்றதுக்காக உம்மு போட்டுக்கிட்டே கேட்டுக்கிட்டிருந்தா. அவுங்க அப்பா பாக்கியம் ரெண்டு ஏக்கர் நெலத்துல (சொந்த நெலமில்ல, சொந்தக்காரவுக நெலம்...) வரப்பு வெட்டி தண்ணி பாய்ச்சீட்டு கூலிய வாங்கி, பஞ்சவர்ணத்துக்கிட்டு கொடுத்திட்டு ஆத்தத்தோன்னு அப்பந்தேன் வந்து படுத்தாரு... இவன் பள்ளிக்கூடக் கதைய சொல்லச்சொல்ல கொஞ்சம் சல்லையா இருந்தாலும், சரி என்னிக்கோ வருஷத்துக்கு ஒருநா ஆண்டு விழா நடக்குது. பய அந்த ஆர்வத்துல பேசி...

குழந்தைகள் எதைத் தொலைத்தார்கள்...? - தமிழ் வாசல் மாத இதழில் வந்த எனது கட்டுரை

வட்டத்திற்குள் வளைவாக இரண்டு கோடுகள் வரைந்து இது பந்து என்றாள் ஒருத்தி. காதும் மூக்கும் வாயும் கண்களும் வைத்து இது மனித முகம் என்றாள் ஒருத்தி. அந்த வட்டத்தை சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துச் சிறுமி அதை நிலா என்றாள். உண்மையில் கிராமத்தையும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்த விவசாயி தான் கண்டுபிடித்த கருவிகளை மண்ணுக்கோ மனிதருக்கோ பாதகமாக இல்லாதபடிக்குத்தான் உருவாக்கினான். அவன் வெட்டிய கிணற்றிலிருந்து நீரை எடுத்து விவசாயம் செய்தான். வற்றிப்போனால் மாடுகளை வைத்தோ, ஏற்றத்தை வைத்தோ நீர் பாய்ச்சினான். கலப்பை, ஏற்றம், பண்ணையரிவாள், சுருமாடு, கிடைமாட்டுச் சாணம், கிடையாட்டுச் சாணம் இவைகள்தான் அவனது உழைப்புக் கருவிகள். இதைத் தாண்டி அவன் யோசித்ததில்லை. அவனது கண்டுபிடிப்புகள் அவ்வளவு மென்மையானவை.  ஆனால் விவசாயத்தை பெரிதாக்குகிறேன் பேர்வழி என்று வந்த தானியங்கி நாற்றுநடும் இயந்திரமும், மோட்டார் பம்புகளும், உழவு செய்யும் டிராக்டர்களும், கதிரறுவடை செய்யும் இயந்திரங்களும் மண்ணின் மகத்துவத்தைப் புரியாமல் சாலைகளில் காட்டுத்தனமாகத் திரிவதைப் போன்று நமக்கெல்லாம் உணவளிக்கும் நி...

தன்னடக்கம் - ஒரு சீன சிறுகதையின் மொழிபெயர்ப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு குய் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சீனாவின் முதலமைச்சருக்கு தேரோட்டும் சேவகனாக பணியாற்றி வந்தான். ஒருநாள் இருவரும் தேரில் சென்று கொண்டிருக்கும்போது, குய்-யின் வீட்டு வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது குய்-யின் உறவினர்கள் அவன் முதல்வருக்கு தேரோட்டுவதைப் பார்த்து பெருமிதம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், குய்-யின் மனைவியிடம் ஓடோடிச் சென்று, "விரைவாக வா... உனது கணவர் முதல்வருக்கு தேரோட்டி வருகிறார்" என்றார். உடனே அவளுடைய மனைவியும் ஓடி வந்து பார்த்தாள். ஆனால் குய்-இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தலையை உயர்த்திக் கொண்டு, செருக்கான பார்வையுடன் அவளைக் கடந்து சென்றான். அன்று மாலை வீட்டுக்கு வந்தான் குய். தன் மனைவி சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்த அவன், "நீ ஏன் மிகவும் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டான். "நான் உங்களை விவாகரத்து செய்யப் போகிறேன்..." என்று பட்டென்று சொன்னாள் அவள். இந்தப்பதிலால் அதிர்ச்சியடைந்த குய், "ஏன்...? ஏன் என்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொல்கிறாய்?" என்றான். "நீங்கள்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

அப்பாவான எம்.எல்.ஏ - சிறுகதை

எதிர்க்கட்சித் தலைவர் கணித்தபடியே சட்டமன்றத்துக்கு முன்கூட்டித் தேர்தல் வந்தது. பரபரத்துப்போனார்கள் உயிரினும் உயிரானவர்கள்... யாராருக்கு சீட் என்பதில் அடிபுடியாகி ஒருவழியாக 234 தொகுதிக்கும் யாரார் போட்டியிடப்போகிறார்கள் என்று அறிவிப்பும் வந்துவிட்டது. அதில் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர் என்று பெஸ்கி ரவி பெயர் இருந்தது. அறிவிப்பைப் பார்த்ததும் பெஸ்கி ரவியின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன் திரண்டனர். “போஸ்டர், டிவி விளம்பரம், அம்பதடில இருந்து நூறடி வரைக்கும் பிளக்ஸ்ன்னு பிச்சு எடுத்துருங்க... காசப்பத்தியெல்லாம் கவலப்படாதீங்க... எம்.எல்.ஏ எலக்சன்ல நம்ம தொகுதியில என்னிய ஒருத்தனும் மறக்கமுடியாதபடிக்கு தீயா வேல பாக்கணும்... சின்னக் கொழந்தைக்குக்கூட என்னிய யார்னு தெரியணும்... சரிதானா” என்று சொல்லிய பெஸ்கி ரவி, ஒரு ஐநூறு ரூபாய் கட்டை பிரித்தார். தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டியது... அடுத்தடுத்து செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்தாகி விட்டது.  பத்துநாள் எப்படிப்போனதென்றே தெரியவில்லை... எங்கு பார்த்தாலும் பெஸ்கி ரவி... பெஸ்கி ரவிதான்... தொண்டர்கள் சொன்னதைச் செய்துவ...