இடம் : பெங்களூரு பேருந்து நிலையம் அருகே... பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன... புகையின் நெடி உடலெங்-கும் பரவுகிறது... பேருந்தில் பயணித்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்... அந்த வெப்பத் தகிப்பிலும் இருவர் பேசிக் கொள்கிறார்கள்... இருவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று அவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது... பச்சை சட்டை போட்டவர் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்பாவியாக இருந்தார். தீ எரியும் வெப்பத்திலிருந்து சற்று விலகி நின்ற அவர், சற்றுநேரம் பையை கீழே வைத்து விட்டு “என்னய்யா கொடும... 42 பஸ்களை எரிச்சிட்டானுங்க... தண்ணி மாட்டோம்ன்றதுக்கு இப்டியெல்லாம் கலவரம் பண்ணணுமா?” என்று கத்தினார்... அவர் அப்படிக் கத்தியும் “என்னங்க... பஸ்ஸை எரிச்சதச் சொல்றீங்களா?” என்று கோடுபோட்ட சட்டைக்காரர் கேட்டுவிட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஒருவாறாக கிரகித்துக் கொண்டார். பின்பு அவரும் பையை கீழே வைத்துவிட்டுத் தொடர்ந்தார்... “இப்டியெல்லாம் கலவரம் பண்ணிப்பண்ணிதானே பேசித் தீர்க்க வேண்டிய அவ்வளவு விஷயத்திலேயும் நாட்டை அழிச்சிக்கிட்டிருக்கோம்...” என்று இவரும் கத்தியபடியே ...